தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாசி பனிச்சரிவு: ஜிபிஆர் கருவியுடன் தேடுதல் பணி தீவிரம் - GPR

உத்தரகாசி பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி ஜிபிஆர் கருவி உதவியுடன் நடைபெற்று வருகிறது.

உத்தரகாசி பனிச்சரிவு: ஜிபிஆர் கருவியுடன் தேடுதல் பணி தீவிரம்
உத்தரகாசி பனிச்சரிவு: ஜிபிஆர் கருவியுடன் தேடுதல் பணி தீவிரம்

By

Published : Oct 27, 2022, 8:47 AM IST

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியைச் சேர்ந்த மலையேறுதல் பயிற்சி நிறுவனம் சார்பில், அக்டோபர் 4 அன்று 5,670 மீட்டர் உயரம் கொண்ட திரெளபதி கா தண்டா-2 மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியில் 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 வழிநடத்துனர்கள் உள்பட மொத்தம் 41 பேர் ஈடுபட்டனர்.

காலை 8.45 மணியளவில் டோக்ரானி பனிப்பாறை அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மாவட்ட மீட்பு படையினர் தேடி வந்தனர். இதுவரை பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஜிபிஆர் என்னும் கருவியைக் கொண்டு பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜிபிஆர் கருவியானது, ஒரு புவி இயற்பியல் இருப்பிட கருவி. இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ளவற்றை ரேடார் அலைகளின் உதவியோடு கண்டறிய முடியும்.

இதன் மூலம் தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருவதாக லெப்டினண்ட் கர்னல் தீபக் வசிஷ்ட், கடற்படை மாலுமி வினய் பவார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மலையேற்றத்தின்போது பனிச்சரிவு - 7 பேர் சடலமாக மீட்பு, 25 பேர் மாயம்!

ABOUT THE AUTHOR

...view details