தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2023, 12:57 PM IST

ETV Bharat / bharat

பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயார் - விரைவில் தாக்கல் : உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி அறிவிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளதாக, நீதிபதி ரஞ்சனா தேசாய் தெரிவித்து உள்ள நிலையில், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

Uttarakhand Uniform Civil Code draft ready; will soon be implemented
பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயார் - விரைவில் தாக்கல் : உத்தர்காண்ட் முதலமைச்சர் தாமி அறிவிப்பு

டெல்லி / டேராடூன்: உத்தரகாண்ட் மாநில அரசு அமைத்த நிபுணர்கள் குழு தயாரித்து உள்ள , வரைவு மசோதா, தயார் நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெள்ளிக்கிழமை (ஜுன் 30ஆம் தேதி) தெரிவித்து உள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது, பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை, தயார் செய்யும் பொருட்டு, உத்தரகாண்ட் மாநில அரசு, நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஒரு குழுவை சமீபத்தில் அமைத்து இருந்தது. இந்தக் குழு, வரைவு மசோதாவை, வெள்ளிக்கிழமை (ஜூன் 30ஆம் தேதி) சமர்ப்பிப்பதாக இருந்தது. அது, தற்போது ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், இந்த விவகாரத்தில், நாட்டிற்கே முன்மாதிரியாக, உத்தரகாண்ட் மாநிலம் திகழ உள்ளது.

இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு, சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை உத்தரகாண்ட் அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. உத்தரகாண்ட் மக்கள் பொது சிவில் சட்டத்தை (UCC) ஆதரித்து எங்களுக்கு வழி காட்டி உள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட யோசனைகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு இது ஒரு பெரிய கவுரவம் மற்றும் வாய்ப்பாக கருதுவதாக முதலமைச்சர் தாமி குறிப்பிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் தாமி வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது, “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஜூன் 30ஆம் தேதி, பொது சிவில் சட்ட வரைவைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழு, தனது பணியை நிறைவு செய்து உள்ளது. விரைவில் #UniformCivilCode உத்தரகாண்டில் செயல்படுத்தப்படும்," என்று ஹிந்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிக்க, உத்தரகாண்ட் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா பிரகாஷ் தேசாய், டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசியதாவது, உத்தரகாண்ட் மாநிலத்திற்கான உத்தேச பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயாராக உள்ளது. விரைவில் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையுடன் இது விரைவில் அச்சிடப்பட உள்ளது. இந்த வரைவு மசோதாவை தயாரிக்கும் போது உத்தரகாண்ட் மாநிலத்தின்அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துகளைக் கமிட்டி கணக்கில் எடுத்துக்கொண்டதாக நீதிபதி தேசாய் குறிப்பிட்டு உள்ளார்.

ஜூன் 2ஆம் தேதி, நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் குழுவின் பிற உறுப்பினர்கள் சட்ட ஆணையத் தலைவர் நீதிபதி (ஓய்வு) ரிதுராஜ் அவஸ்தி மற்றும் உறுப்பினர்கள் கே.டி.சங்கரன், ஆனந்த் பாலிவால் மற்றும் டி.பி.வர்மா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில, பணியாற்ற சட்ட ஆணையம் ஏற்கனவே பரிசீலித்து வருவதாக தேசாய் தெரிவித்து உள்ளார்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்ட வரைவு மசோதா, ஜூன் 30ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார். உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியாக, இங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்பட்சத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தாமி உறுதி அளித்து இருந்தார்.

அங்கு தாமி தலைலையில், அரசாங்கம் அமைந்த நிலையில், நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை தயாரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிபுணர் குழு, கடந்த ஓராண்டாக, பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயாரிப்பில் ஈடுபட்டது. இறுதியாக, வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு உள்ள நிலையில், மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மதங்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தனிப்பட்ட சட்டங்களை நீக்கி அனைவருக்கும் பொதுவான சட்டத்தைக் கொண்டு வருவதையும் பொது சிவில் சட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

2019ஆம் ஆண்டில், பாஜகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்து இருந்தது. இது தொடர்பான மசோதாவை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நாடு வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்க முடியாது என்று கூறி இருந்த நிலையில், நாட்டின் அரசியலமைப்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட வேண்டியதை வலியுறுத்துவதாக, குறிப்பிட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: Buldhana bus fire accident: மகாராஷ்டிரா பேருந்து விபத்து - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details