டெல்லி:உத்தராகண்ட்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் கடந்த மாதம் 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. அப்போது, இடிபாடுகளுக்கு மத்தியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்க பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆஸ்திரேலியா சுரங்க நிபுணர்கள், தாய்லாந்து குகை மீட்பாளர்கள், அமெரிக்காவின் 25 டன் எடைகொண்ட ஆகர் இயந்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் ஆகர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனையடுத்து, எலி வலை முறையைப் பயன்படுத்தலாம் என எண்ணி 12 பேர் கொண்ட குழுவை டெல்லியிலிருந்து அழைத்து வந்தனர். பின்னர், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்டனர். இது குறித்து எலி வலை பணியில் ஈடுபட்ட முன்னா குரேஷி என்பவர் ஈடிவி பாரத் செய்தி தளத்திற்குப் பிரத்தியேக போட்டி அளித்தார், அப்போது அவர் பேசியதாவது, "எனது நண்பரான வழக்குரைஞர் கானிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது அதில், 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என தெரிவித்தார்.
இந்த செய்தியைக் கேட்டவுடன் அவர்களை வெளியே கொண்டு வருவதில் உறுதியாக இருந்தேன். வேறு எதைப் பற்றியும் என்னுடைய மனதில் தோன்றவில்லை. பின்னர், எங்கள் குழுவுடன் நாங்கள் அனைவரும் உத்தரகண்ட் சுரங்கப்பாதைக்குச் சென்றோம். அப்போது, இடிபாடுகளில் ஒரு இயந்திரம் சிக்கியிருந்தது, நாங்கள் எங்கள் வேலையை விரைவில் தொடங்கிவிடலாம் என எண்ணிய போது, இயந்திரத்தை வெளியே எடுப்பதற்கே 3 நாட்கள் ஆகிவிட்டது.