டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் லக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மனைவி ரியானாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வைத்து நண்பர்களுடன் சூதாட்டமாடி தோற்றுள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்கும் மனைவியை விருந்தாக்க தனது வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார். இதைனையறிந்த ரியானா கூச்சலிடவே இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து அப்துல் ரியானாவை விவாகரத்து செய்துள்ளார். இதனால், ரியானா போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் நேற்று (ஜூன் 19) நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், "அப்துல்-ரியானா தம்பதிக்கு 2021ஆம் ஆண்டு திருமணமாகியது முதலே அப்துலும் அவரது குடும்பத்தினரும் வரதட்ணை கேட்டு ரியானாவை தொல்லை செய்துவந்துள்ளனர். இதனிடையே அப்துல் குடிப்பழக்கத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ளார்.