தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் உத்தரகாண்ட் - 23 பேர் மரணம் - உத்தரகாண்ட் கனமழை

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக இதுவரை எட்டுபேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கில்
வெள்ளப்பெருக்கில்

By

Published : Oct 19, 2021, 3:32 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர் புஷ்கர் தாமியிடம் கேட்டறிந்தார். அம்மாநிலத்தில் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்துவருகிறது.

சமோலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடங்கியது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் நாந்கினி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

அடுத்த சில நாள்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில பேரிடர் மையத்திடம் முதலமைச்சர் பாதிப்பு நிலவரங்களை தொடர்ந்து கேட்டறிந்தார். இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுவரை, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23 உள்ளது.

வெள்ளப்பெருக்கை ஆய்வு செய்யும் முதலமைச்சர்

சால்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கட்டுமானத்தில் இருந்த சம்பாவாத் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் புஷ்கரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை, வெள்ள பாதிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் சமோலியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:மகளிர் மட்டும்... அதிரடி காட்டும் பிரியங்கா.. உத்தரப் பிரதேசத்தை கைப்பற்ற பலே திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details