தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞரை தாக்கிக் கொன்ற புலி: ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் - ட்ரோன் மூலம் புலியை தேடும் வனத்துறை

உத்தராகண்டில் இளைஞரை தாக்கிக் கொன்ற புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Uttarakhand
Uttarakhand

By

Published : Jul 28, 2022, 9:21 PM IST

ராம்நகர்: உத்தராகண்ட் மாநிலத்தில், ராம்நகர் வனப் பிரிவுக்குட்பட்ட கோசி மலைத்தொடரின் மோகன் பகுதியில், கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது புலி ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில், அஃப்சருல் (25) என்ற இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த புலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கார்பெட் புலிகள் காப்பகத்தின் இயக்குநர் தீரஜ் பாண்டே, "புலியைக் கண்டுபிடிக்க இரண்டு ட்ரோன்கள், மூன்று யானைகளுடன் இரண்டு குழுக்களை அமைத்துள்ளோம். வனத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், புலி இரண்டு மூன்று கேமராவில் தென்பட்டது.

சரியாக அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பருவமழை காரணமாக தேடுதல் பணி சற்று சிரமமாகவே உள்ளது. புலி வேறு யாரையும் தாக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:குஜராத் போலி மதுபானம்.. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு... 2 எஸ்பிக்கள் பணியிடமாற்றம்...

ABOUT THE AUTHOR

...view details