தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்ட் முதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவ நிர்வாகம் - உத்தரகாண்ட் முதலமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம்

டேராடூன்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் உடல்நிலை முன்னேற்றமடைந்துவருவதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Uttarakhand CM
Uttarakhand CM

By

Published : Dec 31, 2020, 1:15 PM IST

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கடந்த 18ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவம் பெற்றுவந்தார்.

ஆனால் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாலும், கரோனா பாதிப்பிலிருந்து குணமடையாததாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி கடந்த டிசம்பர் 27ஆம் தேதி டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பு காரணமாக டிசம்பர் 28 தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரிவேந்திர சிங் ராவத்தின் உடல்நிலை நன்றாக உள்ளது. அச்சப்படத் தேவையில்லை, விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details