உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கடந்த 18ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவம் பெற்றுவந்தார்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி - உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்
டேராடூன்: கரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் மருத்துவம் பெற்றுவந்த முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், கரோனா பாதிப்பிலிருந்து இன்னும் குணமடையாததால் மேல் சிகிச்சைக்காகநேற்று (டிசம்பர் 27) டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்துவருகிறது.
மாநிலத்தில் ஐந்தாயிரத்து 444 பேர் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 82 ஆயிரத்து 298 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,476 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.