டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் நேற்று (அக். 4) திருமண விழாவில் கலந்துகொள்ள 50 பேருடன் புறப்பட்ட பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கர்வால் போலீசார் தரப்பில், இந்த பேருந்து லால்தாங்கில் இருந்து பிரோன்கலில் உள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சிம்ரி வளைவு அருகே விபத்தில் சிக்கியுள்ளது.
உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழப்பு - சாலை விபத்து
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.
திருமண விசேஷத்திற்குச் சென்ற பேருந்து பல்லத்தாக்கில் திருமண விசேஷத்திற்குச் சென்ற பேருந்து பல்லத்தாக்கில் விழுந்து விபத்து ; 25 பேர் பலிவிழுந்து விபத்து ; 25 பேர் பலி
இரவு 7:30 மணியளவில் எங்களுக்கு தகவல்கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம். 25 பேருடைய உடல்களை மீட்டுள்ளோம். 10 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த பகுதியில் மின்சார விளக்குகள் இல்லாததால் மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டோம். மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.