அயோத்தியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சாவின் (செல்) மூன்று நாள் செயற்குழு கூட்டத்தின் நிறைவு நாளில் பேசிய யோகி ஆதித்யநாத், முந்தைய நிர்வாகங்கள் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்திச் சென்றுள்ளன என சாடினார்.
தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி புரிந்த முந்தைய அரசுகளை சாடிய அவர், நிஷத்ராஜ், மகாராஜ் சுஹெல்தேவ், மஹாராணி லக்ஷ்மிபாய், சிவாஜி மகாராஜ், மஹாராணா பிரதாப், ஜல்கரி போன்ற தலைவர்கள் வழங்கிய வளர்ச்சிப் பாதையில் தனது அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் ஒரு சமூகத்தை துணை சாதி மற்றும் குழுக்களாகப் பிரித்ததே அதன் சிதைவுக்கு வழிவகுத்தது என்று கூறிய யோகி, எதிர்க்கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் பெயரில் அரசியல் செய்வதாகவும், சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.