தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுத்தாண்டு தேர்தல்., உ.பி. மீது பாஜக கவனம்! - சட்டப்பேரவை தேர்தல்

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் மீது பாஜக முழு கவனத்தையும் செலுத்திவருகிறது.

Nadda
Nadda

By

Published : Jul 28, 2021, 8:41 AM IST

டெல்லி : நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் இன்றும், நாளையும் (ஜூலை 28,29) டெல்லியில் தேசியத் தலைவர் ஜெ பி நட்டாவை சந்தித்து பேசுகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தினேஷ் சர்மா, கேசவ் பிரசாத் மௌரியா உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.

இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் தொகுதி பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூலை 18ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெறுகிறது. 2017 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 309 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சமாஜ்வாதி (49), பகுஜன் சமாஜ் (18), காங்கிரஸ் (7) தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : பசவராஜ் பொம்மாய் இன்று பதவியேற்பு

ABOUT THE AUTHOR

...view details