சட்னா (மத்தியப் பிரதேசம்):கள்ளச்சந்தையில், பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், பிபிஇ கிட் (பாதுகாப்பு உடை) ஆகியன விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட்டுகள் கழுவி மீண்டும் விற்பனை: அதிர்ச்சி வீடியோ! - பழைய பிபிஇ கிட்
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பட்கேராவில் இயங்கி வரும், பயோ கழிவுகளை அகற்றும் ஆலையில் இருந்து ரகசியமாக, கொடூரக் காணொலி ஒன்று வெளியானது. அதில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், பிபிஇ கிட்டுகளை கழுவி புதிது போல மாற்றி விற்பனைக்கு தயார் செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்கேராவில் இயங்கிவரும் பயோ கழிவுகளை அகற்றும் ஆலையில் இருந்து ரகசியமாக ஒரு கொடூர காணொலி வெளியானது. அதில், பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், பிபிஇ கிட்டுகளைக் கழுவி, புதியதுபோல மாற்றி மீண்டும் விற்பனைக்கு தயார் செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பந்தபட்ட காட்சிகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.