மேரிலேண்ட் (அமெரிக்கா):அமெரிக்கா, மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள மாண்ட்கோமெரி பகுதியில் வானில் பறந்து கொண்டு இருந்த இலகு ரக விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
மாண்ட்கோமெரி பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்சார கம்பி மீது விழுந்த விமானம் கம்பிகளிடையே சிக்கிக் கொண்டது. மின்மாற்றிகள் பழுதான நிலையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏறத்தாழ ஒரு லட்சம் வீடுகள், வணிக கட்டடங்கள், அடுக்குமாடிகள் என நகரமே இருளில் மூழ்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர், விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்த அதிகாரிகள், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - மதுபோதையில் நடந்ததா..?