வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளிலும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சேவையை ரத்து செய்த விமானங்கள், பயணிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்தின. அந்த வகையில், விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் பயணங்களில் மாற்றம் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அதிக காலம் எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது.
ரீஃபண்ட் கோரி அனுப்பப்பட்ட புகார்களில் பாதியளவை கையாளவே ஏர் இந்தியா நிறுவனம் 100 நாட்களுக்கும் மேல் எடுத்ததாக தெரிகிறது. இந்த கால தாமதத்திற்காக 1.4 மில்லியன் டாலரை அபராதமாக செலுத்த வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.