விசாகப்பட்டினம்: இந்திய கடற்படை உடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பலான பிராங்க் கேபிள் ஏஎஸ்40 இந்தியா வந்துள்ளது. இந்த அதிநவீன கடற்படை போர்க்கப்பல் நேற்று (ஆகஸ்ட் 2) விசாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தது. 1976இல் அமெரிக்க கடற்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களை எளிதாக இயக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் ஒரே நேரத்தில் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு சேவை புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் வரும் 4ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் இருக்கும். இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் பொது விவகார அதிகாரி சுங் கூறுகையில், "இந்திய கடற்படையுடனான நட்புறவை மேலும் மேம்படுத்துவதும், கடற்படை வீரர்களுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வை அதிகரிப்பதும்தான் எங்களது பயணத்தின் முக்கிய நோக்கம்.
இருநாட்டு கடற்படை அதிகாரிகளும், ஊழியர்களும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து பணிபுரிய இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். முதல் முறையாக விசாகப்பட்டினத்திற்குச் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க:வீடியோ: பிரம்மாண்ட பால்வழியின் டைம் லேப்ஸ்