தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எச்1 பி புதுப்பிப்பதில் மாற்றம்... இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா...

எச்1பி விசாவை அமெரிக்காவில் இருந்து கொண்டே புதுப்பிக்கும் நடைமுறையை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கிலான இந்தியர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

H-1B visa
H-1B visa

By

Published : Jun 24, 2023, 4:16 PM IST

வாஷிங்டன் :அமெரிக்காவில் பணியாற்றுவதற்கானவிசாவை இனி அமெரிக்காவில் இருந்து கொண்டே புதுப்பிக்கலாம் என்ற மகிழ்ச்சிகர அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்கள், ஸ்கில்டு வொர்க்கர்ஸ் எனப்படும் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் மற்ற நாட்டினரை காட்டிலும் அதிகபட்சமாக இந்தியர்கள் உள்ளனர்.

இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு 4 லட்சத்து 42 ஆயிரம் எச்1 பி விசா வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் 73 சதவீதம் பேர் இந்தியர்கள் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலே எச்1 பி விசா மூலம் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டி எச்1 பி விசா கோரப்படும் நிலையில், குலுக்கள் முறையில் எச்1 பி விசா விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும், எச்1பி விசா மூலம் அமெரிக்கா செல்லும் நபர் மூன்று ஆண்டுகள் வரை அங்கு தங்கி இருந்து பணியாற்றலாம். பின்னர் விசா நீட்டிப்பு செய்ய அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பச் சென்று அங்குள்ள தூதரங்கள் மூலம் விசா நீட்டிப்புக்கான ஆவணங்களை காண்பித்து விசா நீட்டிப்பு செய்ய வேண்டிய நிலை இருந்தது.

மேலும், 6 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் வசிக்கும் நபர், அங்கு நிரந்தரமாக தங்க கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுக்ளுக்கு ஒருமுறை சொந்த நாட்டிற்கு சென்று விசா புதுப்பிப்பு செய்வது பல்வேறு தரப்பினருக்கும் பெரும் பின்னடைவாக இருந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கொண்டே எச்1பி விசாவை புதுப்பிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்குள்ள தூதரங்களுக்கு சென்று எச்1பி விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க பயணத்தின் இடையே அங்குள்ள இந்திய வம்சாவெளியினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா அமெரிக்கா இடையிலான வெளியுறவு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் இரண்டு கூடுதல் தூதரங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

அதேபோல் அமெரிக்காவின் சியாட்டில் மற்றும் இரண்டு அமெரிக்க நகரங்களில் இந்திய தூதரங்களை நிறுவ உள்ளதாக தெரிவித்தார். எச்-1பி விசா புதுப்பிப்பை அமெரிக்காவிலேயே செய்து கொள்ளலாம் இந்த முடிவு அமெரிக்காவில் வசிக்கும், வேலை செய்யும் மற்றும் வேலை செய்ய விரும்பும் இந்திய குடிமக்களின் சுமையை குறைக்கும் என்றார்.

மேலும் விசா புதுப்பித்தல் செயல்முறையை எளிதாக்கும் என்றும் இந்த முயற்சி ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கும் மற்றும் எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது வரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத்தில் அமெரிக்க தூதரங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், உலகளவில் உள்ள பெரிய அமெரிக்க தூதரகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :"நாளை நமதே" - பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பைடன்!

ABOUT THE AUTHOR

...view details