அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் தலைவர்கள் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரான லாயிட் ஆஸ்டின் வரும் மார்ச் 19ஆம் தேதி அன்று மூன்று நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா வருகை! - லாயிட் ஆஸ்டின்
டெல்லி: அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், மார்ச் 19ஆம் தேதி அன்று மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நிலைநாட்டுவதில் இரு தரப்பும் கவனம் செலுத்தும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய, அமெரிக்க நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல முக்கிய அமைச்சர்களுடன்ஆஸ்டின்ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.