அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசு அலுவலர்கள் ஆகியோரிடம் லாயிட் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்! - லாயிட் ஆஸ்டின்
டெல்லி: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இன்று இந்தியா வந்தடைந்தார்.
ஆஸ்டின்
சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் லாயிட் விவாதிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை லாயிட் ஆஸ்டின் சந்திக்கவுள்ளார். ஆஸ்டினுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனும் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.