தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரர்கள் - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! - யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரர்கள்

ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரர்கள்
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரர்கள்

By

Published : May 30, 2022, 9:56 PM IST

நாகௌர்(ராஜஸ்தான்):2021ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று (மே 30) வெளியாகின. இந்தத் தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், உள்ளிட்டப் பணிகளுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது.

இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம், நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மருத்துவரான இருவரும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மருத்துவர் கிருஷ்ணகாந்த் கன்வாடியா 386ஆவது இடத்தையும், மருத்துவர் ராகுல் கன்வாடியா 536ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இன்று வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி? - ஸ்ருதி ஷர்மா பேட்டி

ABOUT THE AUTHOR

...view details