தமிழ்நாடு

tamil nadu

ஜம்மு- காஷ்மீரில் காவல் துறையினர் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல்!

By

Published : Jun 15, 2022, 10:51 PM IST

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி நடத்திய தாக்குதலில் ஒரு காவலர் காயமடைந்தார்.

ஜம்மு- காஷ்மீரில் காவல்துறையினர் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல்
ஜம்மு- காஷ்மீரில் காவல்துறையினர் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர்:அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள பாட்ஷாஹி பாக் அருகே காவல் துறையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் ஒரு காவலர் காயமடைந்தார். இன்று (ஜூன் 15) மாலை அப்பகுதியில் காவலர் குழு ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. திடீரென பயங்கரவாத கும்பல் அக்காவலர் குழுவின் மீது கையெறி குண்டுகளை சரமாரியாக வீசியது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் இலக்கு சரியாக இல்லாததால் அங்கிருந்த காவலர்கள் தப்பித்தனர். இருப்பினும் ஒரு காவலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தாக்குதல் நடத்திய இடத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடி வருகின்றனர். இதனால் பாட்ஷாஹி பாக் பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:ஆசிரியரை கொன்ற பயங்கரவாதி பிடிபட்டதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details