லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பாரபங்கி போலீசார் தரப்பில், இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய கணவர் அழைப்பதாக பொய் கூறி ஒரு இளைஞர் அழைத்து சென்றுள்ளார்.
அந்த இளைஞரை பெண்ணுக்கு முன்பே தெரியும் என்பதால் அவருடன் சென்றுள்ளார். அதன்பின் அந்த இளைஞர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெண்ணை கூட்டிச்சென்று தனது நண்பர்கள் 4 பேருடன் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணிற்கு வலுகட்டாயமாக மது அருந்த செய்துள்ளனர்.