உத்தரப் பிரதேசம், ஜெஹனாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் பிரகாஷ் சிங் என்னும் ராணுவ வீரர் உறுதி அளித்துள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிக் கைவிட்ட ராணுவ வீரர் மீது புகார் - Army jawan rape a woman
லக்னோ: திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணுடன் உறவு கொண்டு, அவரைக் கைவிட்ட ராணுவ வீரர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆசை வார்த்தைகளைத் கூறி அப்பெண்ணுடன் உறவு கொண்ட ராணுவ வீரர் பிரகாஷ் சிங்கிற்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிவாகியுள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண், பிரகாஷ் சிங்கிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர் அப்பெண்ணைக் கைவிட்ட நிலையில், 112 என்ற காவல் துறையின் உதவி எண்ணுக்கு அழைத்து அப்பெண் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பாக ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சிங்கின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை அப்பெண்ணை பிரகாஷ் சிங் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், மீண்டும் அப்பெண் தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.