ஆக்ரா:உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் ஷாகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(அக்.5) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் தீப்பிடித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயன்றனர்.
பின்னர் இதுகுறித்து தவகலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், தீயை அணைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.