உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகும் சம்பவம் அரங்கேறிவருகிறது.
அன்மையில் பாஜகவின் முன்னணி தலைவரும் அம்மாநில அமைச்சருமான ஸ்வாமி பிரசாத் மவுரியா அக்கட்சியிலிருந்து விலகினார். செல்வாக்குமிக்க தலைவரான மவுரியாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து கடந்த மூன்று நாள்களில் ஏழு எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர்.
இன்று சிகோஹாபாத் தொகுதி எம்எல்ஏவான முகேஷ் வர்மா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஸ்வாமி பிரசாத் மவுரியாவே எங்கள் தலைவர், அவர் எடுக்கும் முடிவுக்கே எங்கள் ஆதரவு, மேலும் பல தலைவர்கள் விரைவில் பாஜகவிலிருந்து விலகுவார்கள் என முகேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவருகின்றனர். தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த மாற்றங்கள் அகிலேஷ் யாதவுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றி