லக்னோ : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ், “அகிலேஷ் யாதவ் மெயின்பூரியில் (Mainpuri) உள்ள கர்ஹால் (Karhal) சட்டப்பேரவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், “மாநிலத்தில் ஐடி துறையில் இளைஞர்களுக்கு 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.
மேலும், “ஐடி துறையில் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்ல சமாஜ்வாதி அரசு அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இங்குள்ள சக் கஜாரியா ஃபார்மில் ஹெச்சிஎல் நிறுவனம் முதலில் முதலீடு செய்தது. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்னெடுத்துச் சென்றிருந்தால், லக்னோ ஐடி மையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.