தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு; உத்தரப் பிரதேசத்தில் சாமியார் கைது! - இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Baba Bajrang Muni
Baba Bajrang Muni

By

Published : Apr 14, 2022, 11:35 AM IST

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் உள்ள சங்கத் ஆசிரமத்தில் உள்ள சாமியார் பஜ்ரங் முனி. இவர், சீதாப்பூர் நடந்த நிகழ்ச்சியொன்றில் இஸ்லாமியர்கள் குறித்தும் இஸ்லாமிய பெண்கள் குறித்தும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறினார்.

இது தொடர்பாக வெளியான காணொலிக் காட்சிகளின் அடிப்படையில் சாமியார் பஜ்ரங் முனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சாமியார் பஜ்ரங் முனி இன்று காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக பஜ்ரங் முனி மீது தேசிய பெண்கள் ஆணையமும் புகார் அளித்துள்ளது.

இந்தப் புகாரை ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா எழுத்துப்பூர்வமாக மாநில காவல்துறை தலைவரிடம் ஒப்படைத்தார். அந்தப் புகாரில், “சாமியார் பஜ்ரங் முனி, ஆறு தினங்களுக்கு முன்பு சீதாப்பூரில் பரப்புரை மேற்கொண்டபோது அங்குள்ள மசூதி முன்பு கூடியிருந்த இஸ்லாமிய பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :ஹிஜாப் சர்ச்சை; நீதிபதிகளை மிரட்டியவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details