தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்த தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வசித்த மகன் - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் - மனநலம் பாதிக்கப்பட்ட மகன்

கோரக்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் இறந்த தாயின் சடலத்துடன் நான்கு நாட்கள் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP
UP

By

Published : Dec 13, 2022, 9:20 PM IST

கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே உள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. நிகிலின் இரு பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். நிகில் மட்டுமே நோயுற்ற தாயுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சாந்தி தேவியின் வீட்டிலிருந்து இன்று(டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், படுக்கையறையில் உள்ள கட்டிலின் அடியில் இருந்து சாந்திதேவியின் சடலத்தை மீட்டனர். தனது தாயார் நான்கு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக நிகில் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து நிகிலை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நிகில் இறந்த தாயின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, நான்கு நாட்களாக வீட்டிலேயே இருந்ததாகவும், துர்நாற்றம் வீசும்போது ஊதுவத்தி கொளுத்தி வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

நிகில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி தாயாரை தாக்கி வந்தார் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறினர். நிகிலின் செயல்களால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், அந்த கட்டடத்தில் குடியிருந்த வாடகைதாரர்களும் காலி செய்துவிட்டதாகவும் தெரிகிறது. சாந்தி தேவி உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறப்பட்டாலும், நிகில் அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details