உத்தரப் பிரதேசம்(கௌசம்பி):புரப் சாரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஷீட்லா மாதா கோயிலில் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் சம்பத் (40) என்பவர் இன்று (செப்.10) வழக்கம் போல் கோயிலுக்குச் சென்றுள்ளார். பிறகு கங்கை நதியில் குளித்த சம்பத் தனது மனைவியைத் தன் காலில் விழுந்து கும்பிடும்படிக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடவுளுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்து நபர் - கடவுளுக்காக நாக்கை அறுத்துக் கொடுத்த நபர்
உத்தரப் பிரதேசத்தில் கடவுளுக்கு காணிக்கையாக ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடவுளுக்கு காணிக்கையாக தன் நாக்கை அறுத்து தந்த நபர்..!
அவர் காலில் விழுந்ததவுடன் தன்னிடமிருந்த பிளேடை எடுத்து தன் நாக்கை வெட்டிக்கொண்டார் என சம்பவ இடத்தில் இருந்த இவரது மனைவி கூறுகிறார். இதனையடுத்து, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் விவேக் கேசர்வானி கூறுகையில், “சம்பத்தின் நாக்கு முழுதாகத் துண்டிக்கப்படவில்லை. அதை மீண்டும் தைத்துச் சரிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!