தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குளிக்காத மனைவி; விவாகரத்து கேட்டு கதறும் கணவர் - UP man seeks divorce wife doesn't bathe daily

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி தினமும் குளிக்க மறுத்ததால், அவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

விவாகரத்து கேட்டு கதறும் கணவர்
விவாகரத்து கேட்டு கதறும் கணவர்

By

Published : Sep 25, 2021, 5:27 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும், குவார்ச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இத்தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், தன்னை தினமும் குளிக்கவில்லை எனக் கூறி கணவர் விவாகரத்து கோரியுள்ளதாக அப்பெண், அலிகார் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, பெண்கள் பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் அத்தம்பதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தினமும் சண்டை

அந்தப் பெண் தனது கணவருடனான திருமண வாழ்க்கையை தொடர விரும்புதாகவும், கணவர் விவாகரத்து பெற உறுதியாக இருக்கிறார் எனவும் பெண்கள் பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் கணவர், "எனது மனைவியை குளிக்கும்படி கூறினால், தினமும் இருவருக்கும் இடையே சண்டைதான் வருகிறது. என்னால், சண்டை போட்டுக்கொண்டே அவருடன் வாழ முடியாது" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இத்தம்பிக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முயற்சி செய்துவருவதாகவும், இருவருக்கும் தனது திருமண உறவை தொடர்வது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பெண்கள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ள இந்திய கப்பற்படையின் கப்பல்

ABOUT THE AUTHOR

...view details