தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கங்கை நதிக்கரையில் கல்யாண் சிங் உடல் தகனம்!

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் உடல் கங்கை நதிக்கரையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டனர்.

Kalyan Singh
Kalyan Singh

By

Published : Aug 23, 2021, 9:45 PM IST

புலந்த்ஷாஹர் : பாஜக மூத்தத் தலைவர் கல்யாண் சிங் பூதவுடல் திங்கள்கிழமை (ஆக.23) பிற்பகல் கங்கை நதிக்கரையில் உள்ள புலந்த்ஷஹரின் நரோரா நகரின் பன்சி காட்டில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சர் உமாபாரதி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த கல்யாண் சிங் உடலுக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி

ஜெய் ஸ்ரீ ராம்

இந்நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கல்யாண் சிங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கல்யாண் சிங் இறுதிச் சடங்கின் போது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று தொடர்ச்சியாக முழக்கங்கள் கேட்டன. கல்யாண் சிங் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (SGPGI) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

கல்யாண் சிங் வகித்த பொறுப்புகள்

இந்நிலையில் ஆக.21ஆம் தேதி சனிக்கிழமை காலமானார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராக (ஜூன் 1991 முதல் டிசம்பர் 1992 மற்றும் செப்டம்பர் 1997 முதல் நவம்பர் 1999 வரை) கல்யாண் சிங் பொறுப்பு வகித்துள்ளார்.

கல்யாண் சிங் உடல் தகனம்

மேலும், “ராஜஸ்தானின் ஆளுநராகவும் (2014-2019) பணியாற்றினார். கல்யாண் சிங் மாநிலத்திலும் மத்திய அளவிலும் பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இதையும் படிங்க :அயோத்தி சாலைக்கு கல்யாண் சிங் பெயர்!

ABOUT THE AUTHOR

...view details