மிர்சாபூர்:உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதி தலேவார் சிங். நீதிமன்றத்தில் உள்ள தனது அறையில், கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. இதில் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டா, நீதிபதி தலேவார் சிங் கால் பகுதியை துளைத்தது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த நிலையில், வலியால் நீதிபதுஇ தலேவார் சிங் துடிதுடித்துள்ளார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் பகுதியில் பாய்ந்த குண்டு எடுக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நீதிபதி நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.