தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர்ந்து செல்போனில் நண்பருடன் பேசிய மனைவி; ஆத்திரத்தில் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்! - Husband kills wife

உத்தரப்பிரதேசத்தில் தன் மனைவி செல்போனில் ஒருவருடன் தொடர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் தன் மனைவியைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

தொடர்ந்து செல்போனில் பேசிய மனைவி ; ஆத்திரத்தில் கொன்ற கணவர் தற்கொலை...!
தொடர்ந்து செல்போனில் பேசிய மனைவி ; ஆத்திரத்தில் கொன்ற கணவர் தற்கொலை...!

By

Published : Oct 5, 2022, 10:57 AM IST

லக்னோ(உத்தரப்பிரதேசம்): தல்கடோரா பகுதியைச்சேர்ந்த ஒருவர் தன் மனைவியைக்கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தேறியது. தனது மனைவி ஓர் நண்பருடன் நெடு நேரம் போனில் பேசியதால் அதைக் கண்டுகணவர் ஆத்திரமடைந்ததால் இப்படி செய்ததாகத் தெரிகிறது.

கேதன் விஹாரில் வசித்து வரும் குல்வந்த் சிங்(50) - புஷ்பா சிங்(38) தப்ங்களின் இரண்டு பதின்பருவ மகன்களுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று(செப்.4) மூத்த மகன் படிக்கச்சென்றுள்ளார். இளைய மகனும், தனது நண்பரின் வீட்டிற்குச்சென்றுள்ளார். பின், மாலை இளைய மகன் வீடு திரும்புகையில் தனது தாயும் தந்தையும் இறந்து கிடந்ததைக்கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மனைவி புஷ்பா சிங் தலை உடைக்கப்பட்டு கீழே சடலமாகக் கிடப்பதையும், கணவர் குல்வந்த் சிங் தூக்கிட்டுத்தற்கொலைசெய்து சடலமாக இருப்பதையும் கண்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு சடலங்களையும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து துணை ஆணையர் சிரஞ்சீவ் நத் சின்ஹா கூறுகையில், “அவர்களின் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில், புஷ்பா சிங் அதிகநேரம் செல்போனில் ஒரு நண்பருடன் பேசுவதால், கணவன் - மனைவியிடையே வாக்குவாதங்கள் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரின் வாக்குவாதம் முற்றியதில், குல்வந்த் சிங் புஷ்பா சிங்கை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து இறந்த தம்பதியின் இளைய மகன் கூறுகையில், “எனது பெற்றோர் தொடர்ந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அது இந்த அளவுக்கு எல்லை மீறுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் காலை 10 மணியளவில் நண்பர் வீட்டிற்கு விளையாடச்சென்றேன். திரும்பி வந்து பார்க்கையில் என் தாய் தந்தையர் சடலமாகக் கிடந்தனர்” என்றார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் இரண்டு என்கவுன்ட்டர்களில் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details