உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பை, காலணி, ஸ்வெட்ர் போன்றவை அரசு இலவசமாக வழங்கப்படுகிறது.
இனி இவை பொருள்களாக வழங்குவதற்கு பதிலாக, இவற்றை வாங்குவதற்கான தொகையை அரசு மாணவர்களின் பெற்றோரின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 1.6 கோடி மாணவர்களின் பெற்றோர் பயனடைவார்கள் எனவும் இதற்காக ரூ.1,800 கோடி அரசுக்கு செலவு ஏற்படும் என அறிக்கையில் கூறப்படுகிறது.
மேலும், டிஆர்டிஓ நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கா ரூ.9,300 கோடி மதிப்பிலான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 500க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு நேரடியாகவும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இனி இந்த போன்களில் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது