தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாலிபான்களை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் - யோகி ஆதித்யநாத் கண்டனம் - சமாஜ்வாதி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான்

எதிர்க்கட்சியில் இருக்கும் சில தலைவர்கள் வெட்கமே இல்லாமல் தாலிபான்களை ஆதரிக்கிறார்கள் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் கண்டனம்
யோகி ஆதித்யநாத் கண்டனம்

By

Published : Aug 19, 2021, 7:41 PM IST

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சியான சாம்ஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தாலிபான்கள் குறித்து சமாஜ்வாதி கட்சியினர் தெரிவித்த கருத்தை சுட்டிக் காட்டி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான், தாலிபான்களின் போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போன்றது என ஒப்பிட்டு பேசினார்.

எம்பியின் இந்தக் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை குறிப்பிட்டு பேசிய யோகி ஆதித்யநாத், "எதிர்க்கட்சியில் இருக்கும் சில தலைவர்கள் வெட்கமே இல்லாமல் தாலிபான்களை ஆதரிக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை ஏவிவிடும் தாலிபான்கள் ஆட்சியை இங்கேயும் கொண்டுவர வேண்டும் என பலர் துடிக்கிறார்கள்" என சாடியுள்ளார்.

இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்கும் நிதீஷ் குமார்

ABOUT THE AUTHOR

...view details