லக்னோ:உத்தர பிரதேசத்தின் பாஸ்தி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 28இல், மோதிலால் சிங் தனது காரில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மரத்தில் மோதி அந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், மோதிலால் உயிரிழந்தார். அவரின் மனைவி மிகவும் அபாயமான நிலையில் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் யோகியின் சிறப்பு அதிகாரி விபத்தில் மரணம் - Uttar Pradesh CM OSD
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மோதிலால் சிங் சாலை விபத்தில் இன்று (ஆக. 26) உயிரிழந்தார்.
மோதிலால் சிங்
இதில், மோதிலால் சிங், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் . இந்நிலையில், மோதிலால் சிங் மறைவுக்கு முதலமைச்சர் யோகி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை