தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுத காவல்படை விழாவில் பங்கேற்ற யோகி - up cm

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆயுத காவல்படை காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

promotion ceremony programme of PAC personnel
promotion ceremony programme of PAC personnel

By

Published : Nov 13, 2020, 4:33 PM IST

லக்னோ: ஆயுத காவல்படை காவலர்கள் தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றதை உத்வேகப்படுத்தும் விழாவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆயுத காவல்படை காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதை உத்வேகப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட விழாவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், காவலர்களை உத்வேகப்படுத்த, அவர்கள் தேவைகளை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்த மாநிலத்தை முன்னேற்ற நாம் இணைந்து பாடுபடுவோம் என நம்புகிறேன் என்றார்.

இந்த பதவி உயர்வு குறித்த அறிவிப்பை நவம்பர் 6ஆம் தேதியே உத்தரப் பிரதேச மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலர் அவனிஷ் அவஸ்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details