தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞரின் யுபிஐ மூலம் சட்டவிரோதமாக ரூ.1.52 கோடி பரிவர்த்தனை செய்த சீனர்கள்? - போலீசில் புகார்! - போலீசில் புகார்

கோரக்பூரைச் சேர்ந்த ஒருவரது வங்கி யுபிஐ மூலம் இரண்டு சீனர்கள் சுமார் 1.52 கோடி ரூபாய் தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

UP:
UP:

By

Published : Oct 19, 2022, 10:44 PM IST

கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த சச்சிதானந்த் துபே என்பவர், தனது வங்கிக் கணக்கின் மூலம் மர்மநபர்கள் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், "கடந்த ஜூன் மாதம் தனியார் வங்கியில் கணக்குத் தொடங்கினேன். அதன் பிறகு எந்தவித பரிவர்த்தனையும் நான் செய்யவில்லை. இப்போது எனது யுபிஐயை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். எனது யுபிஐ மூலம் கேரளாவில் உள்ள சில வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனது யுபிஐயை பயன்படுத்தியது இரண்டு சீனர்கள் என்றும், ஒரு வாரத்தில் கேரளாவில் உள்ள ஆயிரம் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 1.52 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

மேலும், புகார் கடிதத்துடன் தனது வங்கிக் கணக்கில் இருந்து நடந்த சட்ட விரோதப் பணப்பரிமாற்றத்திற்கான பேங்க் ஸ்டேட்மென்டையும் போலீசாரிடம் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து தன் காதலனை தேடி முர்ஷிதாபாத் வந்த பெண்

ABOUT THE AUTHOR

...view details