லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் டிம்பிள் யாதவ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். குறிப்பாக, டிம்பிள் யாதவ், பாஜக வேட்பாளரான ரகுராஜ் சிங் ஷக்யாவை விட 35,574 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்துவருகிறார். அதேபோல, ராம்பூர் மற்றும் கட்டௌலி சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு... சமாஜ்வாடி கட்சி டிம்பிள் யாதவ் முன்னிலை... - UP bypolls Samajwadi Party candidate Dimple Yadav
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
![இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு... சமாஜ்வாடி கட்சி டிம்பிள் யாதவ் முன்னிலை... UP bypolls: SP leading in Mainpuri, Rampur Sadar and RLD in Khatauli](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17146062-thumbnail-3x2-l.jpg)
UP bypolls: SP leading in Mainpuri, Rampur Sadar and RLD in Khatauli
இந்த ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் அசிம் ராஜா 3,224 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஆகாஷ் சக்சேனாவை விட முன்னிலையில் உள்ளார். மறுபுறம் கட்டௌலி தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளம் வேட்பாளர் மதன் பாய்யா பாஜகவின் ராஜ்குமார் சைனியை விட 1,387 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். ஆகவே, இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துவருகிறது.
இதையும் படிங்க:குஜராத்தில் இமாலய வெற்றியை நெருங்கும் பாஜக.. என்ன சொல்கிறது வாக்கு எண்ணிக்கை நிலவரம்..?