தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Seema-Sachin love story: பாகிஸ்தான் பெண்ணிடம் ஏடிஎஸ் அதிகாரிகள் கேட்ட 13 கேள்விகளும் அவரின் பதில்களும்! - பாகிஸ்தான் இந்தியா எல்லை

காதலனுக்காக பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி இந்தியா வந்த சீமா ஹைதரிடம் உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 2 நாள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்களைப் பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 19, 2023, 10:10 PM IST

லக்னோ, உபி:நாடுகளுக்கு இடையே விரோதம், வயது, மொழி, மிரட்டல்கள் எனப் பல பிரச்னைகளை கடந்து சீமா மற்றும் சச்சின் காதல் இந்தியா வரை வந்துள்ளது. தனது காதலனை தேடி பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த சீமாவும் சச்சினும் பதுங்கியிருந்த நிலையில் அவர்களிடம் உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இரண்டு நாள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 17 மற்றும் 18ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையின்போது சீமா எல்லை தாண்டி வந்தது எப்படி? எதற்காக? தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளாரா? உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அதிகாரிகள் 13 கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த கேள்விகள் மற்றும் சீமாவின் பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி 1: உங்களிடம் இரண்டு பாஸ்போர்ட்கள் உள்ளன... இதில் அசல் பாஸ்போர்ட் எது?

சீமா:என்னிடம் இருந்த பாஸ்போர்ட்டில் சீமா என்று மட்டும் எழுதி இருந்ததால், கடந்த பத்து நாட்களாக பல பிரச்னைகளை எதிர்கொண்டேன். அதனால்தான் இரண்டாவது பாஸ்போர்ட் சீமா குலாம் ஹைதர் என்ற பெயரில் பெற்றேன். இதில் புதிதாக சேர்க்க வேறு எதுவும் இல்லை.

கேள்வி 2: பாகிஸ்தான் ராணுவத்தில் உங்களுக்கு ஒரு சகோதரனும் மாமாவும் இருக்கிறார்களா? அவர்கள் உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்களா அல்லது ஐஎஸ்ஐ உங்களை இந்தியா செல்லச் சொன்னதா?

சீமா: நான் பல வருடங்களாக என் அண்ணனையும் மாமாவையும் சந்திக்கவில்லை. ஐ.எஸ்.ஐ என்றால் என்ன? கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் இந்தியா வந்தபோது ஒரு டிவி சேனல் நிகழ்ச்சியில் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜென்ட் என்று அழைக்கப்பட்டபோதுதான் எனக்கு இது தெரிய வந்தது. நான் சச்சின் மீனாவுக்காக மட்டும்தான் நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளேன்.

கேள்வி 3: நீங்கள் கராச்சியில் வசித்து வந்தீர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் இருக்கும் போது ஐ.எஸ்.ஐ பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்பது எப்படி சாத்தியம்? நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் PubG போன்ற கேம்களை விளையாடுகிறீர்கள். பிறகு எப்படி உங்களுக்கு ஐ.எஸ்.ஐ பற்றி தெரியாது எனக்கூற முடியும்?

சீமா: என் வாழ்க்கையில் பாதி, குழந்தைகளை வளர்ப்பதிலேயே கழிந்தது. கடந்த ஐந்து வருடங்களாக நேரத்தை கடத்துவதற்காகவே PUBG விளையாடினேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ போன்ற வார்த்தைகளைக் கேட்க நேரமில்லை.

கேள்வி 4:ஐ.எஸ்.ஐ என்ற வார்த்தையைக் கேட்க உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லையா? ஐந்தாம் வகுப்பு வரை படித்தாலும் உங்கள் ஆங்கிலம் நன்றாக இருக்கிறதே... அது எப்படி?

சீமா:நான் PUBG விளையாடத் தொடங்கிய 2019க்குப் பிறகுதான், ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். நான் PUBG விளையாடும்போது சிறுவர்கள் மற்றும் ஆண்களுடன் பேசுவேன். அவர்கள் மூலமாகத்தான் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.

(குறிப்பு: விசாரணை அதிகாரி ஒருவர் விசாரணையின்போது பக்கத்தில் இருந்து ஆங்கிலத்தில் சில வரிகளை எழுதி சீமாவிடம் படிக்கக் கொடுத்துள்ளார். அப்போது, சீமா அந்த வரிகளை உடனே சரியாக படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கேள்வி 5: நீங்கள் உங்கள் மொழிகளான உருது, அரபு, உள்ளிட்ட மொழிகளை கடந்து ஹிந்தியில் நன்றாக பேசுகிறீர்கள். ஆங்கிலமும் நன்றாகப் பேசுகிறீர்கள். இதற்குப் பயிற்சி கொடுத்தது யார்? நீங்கள் இந்திய மக்களுடன் கலக்க வேண்டும் என்பதற்காக ஹிந்தி கற்றுக்கொள்ள சொன்னார்களா? அகதி, பேரழிவு போன்ற வார்த்தைகளை நீங்கள் ஹிந்தியில் மிகத் தெளிவாக பேசுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம் அது எப்படி?

சீமா: எனக்கு யாரும் ஹிந்தி கற்றுத்தரவில்லை. என் காதலுக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன். எனக்கு யாரும் பயிற்சி கொடுக்கவும் இல்லை; அனுப்பவும் இல்லை. சச்சினுடன் பேசும் போதுதான் ஹிந்தி கற்றுக்கொண்டேன்.

கேள்வி 6: சச்சின் மீனாவுக்கு ஹிந்தி சரியாக தெரியாது. அவரது மொழியில் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சாயல் இருக்கிறது. ஆனால், நீங்கள் பேசுவது ஹிந்தி நன்றாகப் பயிற்சி பெற்றவர் போல் உள்ளது, இது எப்படி சாத்தியம்?

சீமா:பதில் சொல்லவில்லை.

கேள்வி 7:ஜூலை 4ஆம் தேதி நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு நீங்கள் பேருந்தில் வந்தபோது உங்கள் செல்ஃபோன் வேலை செய்யவில்லை எனவும், அதனால் ஓட்டுநரின் போனில் இருந்து சச்சினை அழைத்ததாகவும் காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளீர்கள். ஆனால், நொய்டா காவல்துறை உங்களிடமிருந்து நான்கு செல்ஃபோன்கள் மற்றும் நான்கு சிம்களை மீட்டுள்ளனர். இவ்வளவு மொபைல்களை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள். அவற்றை எதற்காக உடைத்தீர்கள்?

சீமா: நான் நேபாளத்தில் இருந்து இந்தியா வந்தபோது எனது பாகிஸ்தான் சிம் வேலை செய்யவில்லை. நான் சச்சினிடம் வந்ததும் எனக்கு ஒரு புதிய சிம் கொண்டு வந்தேன். பாகிஸ்தான் மக்கள் என்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மொபைல்களை உடைத்தேன்.

கேள்வி 8: சச்சின் ஒரு சிம் கொண்டு வந்தார், மீதமுள்ள சிம்கள் எப்படி வந்தது?

சீமா: ஞாபகம் இல்லை.

கேள்வி 9: நீங்கள் அனைத்து சிம்களையும் வெவ்வேறு செல்போன்களில் போட்டுள்ளீர்கள், அனைத்திலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் நீங்கள் போட்டிருக்கும் புரொஃபைல் போட்டோ வேறு ஒரு பெண்ணுடையதாக உள்ளது. மற்றொன்றில் காஷ்மீர் மலைகளின் படம் இருக்கிறது. யாருடைய அறிவுறுத்தலின் அடிப்படையில் இதையெல்லாம் செய்கிறீர்கள்?

சீமா:நான் வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை, தகவல் தொடர்பு கருவிகளையும் பயன்படுத்தவில்லை.

கேள்வி 10: துபாய் வழியாக நேபாளத்திற்கு இரண்டு முறை வருவதற்கு நிறைய பணம் செலவாகியிருக்க வேண்டும். இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? நீங்களே வாடகைக்கு வாழ்கிறீர்கள். உங்கள் கணவருடனான உறவு சரியில்லை. பல வருடங்களாக நீங்கள் உங்கள் சகோதரனை சந்திக்கவில்லை, உங்களுக்கு பணம் எப்படி கிடைத்தது? யாராவது உங்களுக்கு உதவியிருந்தால், உண்மையை வெளிப்படுத்துங்கள், நாங்கள் உங்களை பாகிஸ்தானுக்கோ அல்லது சிறைக்கோ அனுப்ப மாட்டோம். இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்வோம்?

சீமா: இரண்டு பயணங்களுக்கும் மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் செலவானது. என் பெயரில் இருந்த ஒரு வீட்டை விற்றுவிட்டேன். எனது நகைகளை விற்றுவிட்டு எனது கணவர் குலாமை துபாய்க்கு அனுப்பினேன். நான் இந்தியா வருவதற்கு யாரும் உதவவில்லை என்று பலமுறை கூறிவிட்டேன்.

கேள்வி 11: இந்தியாவில் சச்சினைத் தவிர வேறு யாரையும் உங்களுக்குத் தெரியுமா?

சீமா:ஆமாம், ஆனால் சரியாக இல்லை. நான் பாகிஸ்தானில் இருந்தபோது, சச்சினைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, சில சிறுவர்களுடன் PUBG மற்றும் Facebook மூலம் எனது நேரத்தை கடத்துவது வழக்கம். ஆரம்பத்தில் சச்சினிடம் என்னைப் பற்றி அதிகம் சொல்லவில்லை, அவரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.

கேள்வி 12: இதுவரை உங்கள் வாழ்கையில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? உங்கள் உண்மையான வயது என்ன?

சீமா:எனக்கு 27 வயதுதான் ஆகிறது. பாஸ்போர்ட்டில் ஏதோ தவறு நடந்திருக்கிறது.

கேள்வி 13:இந்தியா வந்ததன் உண்மையான நோக்கம் என்ன?

சீமா:நான் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக எனது நான்கு குழந்தைகளுடன் வந்துள்ளேன், சச்சினுக்காக மட்டுமே வந்தேன். இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு ஏற்கனவே ஓரளவு தெரியும். அதனால்தான் நானும் சச்சினும் வாடகை வீட்டில் குடியிருந்தோம். எனக்கு இப்போது மிகுந்த சோர்வாக உள்ளது.

இந்த விசாரணையில் சீமா நேரத்தை செலவிடுவதற்காகத்தான் PUBG விளையாடியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. ஆனால், உ.பி., ஏ.டி.எஸ் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு சீமாவின் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் சீமாவிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வீடியோ பதிவு உ.பி., ஏ.டி.எஸ் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதரும், இந்தியாவில் உள்ள சச்சின் மீனாவுக்கும் இடையே கடந்த 2019ஆம் ஆண்டு PUBG விளையாடும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சுமார் 1,300 கி.மீ. தொலைவுக்கு இடையே வியத்தகு காதல்கொண்டு எல்லை கடந்து ஒன்று சேர்ந்துள்ளனர். தற்போது இருவரும் நொய்டாவில் உள்ள ரபுபுரா பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உலகின் வலிமையான பாஸ்போர்ட் - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details