குஷிநகர்:உத்தரபிரதேசத்தில் மிட்டாய் தருவதாக கூறி 4 வயது சிறுமியை கடத்திச் சென்று 16 வயது சிறுவன் இரு முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது. குஷிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிறுமி தன் உறவினர்கள் மட்டும் நண்பர்களுடன் சேர்ந்து தன் வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்து உள்ளது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சிறுமியை அழைத்து மிட்டாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக சிறுமியின் அழுகை மற்றும் உடல் மற்றும் ஆடையில் இருந்த காயங்கள் மற்றும் ரத்தக் கரைகளை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.
சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்று பரிசோதனை நடத்திய போது பேரதிர்ச்சி இடியாய் அவர்களது தலையில் வந்து விழுந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர் துடிதுடித்து போயினர். மருத்துவமனையில் ஊருக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் இது தொடர்பாக கிராம நிர்வாகிகள் மட்டும் பஞ்சாயத்துதாரர்களிடம் முறையிட்டு உள்ளனர்.
மேலும், 16 வயது சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்த நிலையில், சிறுவனின் உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கூடாது என கிராம பஞ்சாயத்து தாரர்கள் சிறுமியின் பெற்றோரை நிர்பந்தித்தாக கூறப்படுகிறது.