ஹைதராபாத்: மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'காட்பாதர்' படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் நயன்தாரா கதாபாத்திரம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. அதில் நயன்தாரா காட்டன் லினன் செக்குடு புடவையில் கெத்தான லுக்கில் உள்ளார். இப்படத்தில் சத்யப்ரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் காட்ஃபாதர் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கிறார். இதில் பல குறிப்பிடத்தக்க நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தில் சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய டீசர் அமோக வரவேற்பை பெற்றது.