தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சரின் அறிக்கையைக் கிழித்து எறிந்த விவகாரம்: எம்பி சாந்தனு சென் இடைநீக்கம்

அமைச்சரின் நகலைக் கிழித்து எறிந்த  திருணமூல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Unruly behaviour
எம்.பி சாந்தனு சென்

By

Published : Jul 23, 2021, 3:46 PM IST

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், நேற்று இந்த விவகாரம் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அப்போது, திருணமூல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், அமைச்சர் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சாந்தனு சென்னின் நடவடிக்கையைப் பலரும் கண்டித்தனர்.

அமைச்சரின் அறிக்கையைக் கிழித்து எறிந்த எம்பி சாந்தனு சென்

இந்நிலையில் இன்று, மாநிலங்களவை கூடியதும் சாந்தனு சென் நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இதற்கு திருணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவை மதியம் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை - தமிழ்நாடு அரசு அரசாணை

ABOUT THE AUTHOR

...view details