அகமதாபாத்: குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், தற்போது வரை 148 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்திய அளவிலான சாதனையை முறியடித்து பிரதமரின் சொந்த மாநிலத்தில் ஏழாவது முறை பாஜக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 68 தொகுதிகளை உடைய இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 30 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றாலும், அதற்கு கடுமையான போட்டியை பாஜக அளித்து வருகிறது.
குஜராத்தைப் பொறுத்தவரையிலும் பாஜகவின் வெற்றி என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 30 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். அவரின் நெருங்கிய கூட்டாளியான உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் 2 மாதங்களுக்கு மேலாக முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் பாஜகவுக்கு குஜராத் தேர்தல் அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.