உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கங்கை கரையோரத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டது சில நாள்களுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது, கங்கை நதியில் நீர்வரத்து அதிகமாகியுள்ள நிலையில், நதிக்கரையோரம் புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இது தொடர்பாக உள்ளூர்வாசிகளிடம் கேட்டபோது, நதிக்கரைக்கு அருகில் புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.