தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு செய்ய அனுமதி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - திருமணமான பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை

திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு செய்ய உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SC
SC

By

Published : Sep 29, 2022, 2:15 PM IST

டெல்லி: திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(செப்.29) நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு செய்ய உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், "திருமணமான பெண்கள் கணவரால் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன் மூலம் கருவுற்றால், 24 வாரங்களில் கருவை கலைக்க சட்டப்பூர்வ உரிமை உள்ளது. ஆனால் திருமணமான பெண்கள் மட்டுமே இவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்று தீர்மானிக்க முடியாது.

திருமணமாகாத பெண்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடும். இதுபோன்ற சம்பவங்களால் திருமணம் ஆன பெண்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஒன்றுதான். அதனால் சட்டத்தின் அடிப்படையில் அவர்களை பிரித்துப் பார்க்க முடியாது.

அதனால், காலத்திற்கு ஏற்றார்போல் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதன்படி, திருமண நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்துப் பெண்களும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த முக்கிய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "ஆணுறைகளும் வேண்டுமா?" சானிட்டரி பேட் குறித்து சிறுமியின் கேள்விக்கு பீகார் ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பதில்...

ABOUT THE AUTHOR

...view details