தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கட்டுனா உன்னை தான் கட்டுவேன்' - ராஜஸ்தானில் திருமணம் செய்துகொண்ட இரு மாணவிகள்! - ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இரு மாணவிகள்

ராஜஸ்தானைச் சேர்ந்த இரு மாணவிகள் இணைந்து வாழ விரும்புவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இரு மாணவிகள்- பாதுகாப்பு கோரி போலீஸில் தஞ்சம்
ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இரு மாணவிகள்- பாதுகாப்பு கோரி போலீஸில் தஞ்சம்

By

Published : Jun 22, 2022, 3:55 PM IST

உதய்பூர்:இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட மாணவிகள் அஜ்மீர் காவல் துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி தஞ்சமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் உதவி காவல் ஆணையர் இந்தர் சிங் கூறுகையில், ‘ 20 மற்றும் 21 வயதுடைய இரு மாணவிகள் டெல்லியின் நாராயணபுரத்தில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொண்டதாகவும் ஒன்று சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்ததாக' கூறினர்.

மேலும் விசாரணையில் இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்ததாகவும், இவர்களது உறவு குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்கள். இதனை அறிந்த குடும்பத்தார் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அவர்கள் அனுமதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details