தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகிலேஷ் யாதவ்வுக்கு எதிராக மத்திய அமைச்சர் போட்டி! - கர்ஹால்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வுக்கு எதிராக மத்திய அமைச்சர் எஸ்பி சிங் பகேல் போட்டியிடுகிறார்.

SP Baghel
SP Baghel

By

Published : Jan 31, 2022, 4:47 PM IST

லக்னோ : மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல் (SP Singh Baghel) கர்ஹால் (Karhal assembly constituency) சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை (ஜன.31) வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரியில் கர்ஹால் சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் வெற்றிப் பெற்ற மக்களவை தொகுதிக்கு கீழ்வரும் இந்தச் சட்டப்பேரவை தொகுதியில் முலாயம் சிங்கின் மகனும் முன்னாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து தற்போது பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல் (SP Singh Baghel) நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது இந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஆக சமாஜ்வாதி கட்சியின் சோபரான் யாதவ் ( Sobaran Yadav) உள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல்கட்டமாக பிப்.10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 கட்டங்களான நடைபெறும் இந்த வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க : உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவ் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details