டெல்லி: ஐநா பருவநிலை மாநாடு (UNFCCC - COP 27) எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை வகிக்கிறார். இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பில், "இந்த மாநாடு தொடர்பாக, எகிப்து அரசின் முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
வளரும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப செயல் திட்டங்களை வகுக்கும் எகிப்து அரசின் தலைமைக்கு இந்தியா ஆதரவு வழங்குகிறது. இழப்பு, சேதம் ஆகியவை இரண்டு முக்கியமான சிக்கல்களாகும். இந்த இரு சிக்கல்களிலும் முன்னேற்றம் ஏற்படுவது அவசியமானதாகும். இழப்பு மற்றும் சேதம் என்பது இந்த மாநாட்டின் முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும், சேதத்திற்கு நிதி வழங்களில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.