தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி - நிதின் கட்கரி

யூ-ட்யூப் மூலம் தான் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

YouTube channel  YouTube  nitin gadkari  union minister  union minister nitin gadkari  union minister nitin gadkari YouTube channel  nitin gadkari YouTube channel  ஒன்றிய அமைச்சர்  யூடியூப்  மத்திய பிரதேசம்  34 சாலைத் திட்டங்கள்  ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி  நிதின் கட்கரி  நிதின் கட்கரி யூடியூப்  c
நிதின் கட்காரி

By

Published : Sep 17, 2021, 6:23 PM IST

மத்தியப் பிரதேசம்:நாட்டின் வளர்ச்சிக்காகத் தனது துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, வீட்டிலிருந்தே மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இந்தியாவின் முதல் யூ-ட்யூபரும் ஆவார்.

இவர் மத்தியப் பிரதேசத்திற்கான 34 சாலைத் திட்டங்களைத் தொடங்க நேற்று (செப். 16) இந்தூருக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் தனது கரோனா பொதுமுடக்கம் நாள்கள் குறித்தும், யூ-ட்யூப் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

ஒரு மாதத்திற்கு ரூ.4 லட்சம்

அதில் அவர் தெரிவித்ததாவது, “கரோனா பொதுமுடக்க காலத்தில், நான் இரு விஷயங்களைச் செய்தேன். ஒன்று, வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன். மற்றொன்று, இணையவழியில் கருத்தரங்குகள் நடத்தினேன்.

நான் நடத்திய அனைத்து இணையவழி கருத்தரங்குகளையும், எனது யூ-ட்யூப் பக்கத்தில் பகிர்ந்தேன். அந்தக் காணொலி பெரியளவில் பார்வையாளர்களை எட்டியதால், யூ-ட்யூபிலிருந்து வருமானம் வரத் தொடங்கியது.

காணொலி கலந்தாய்வு மூலம் நிறைய பேரிடம் உரையாற்றினேன். இவற்றை எனது யூ-ட்யூபில் பதிவேற்றம் செய்ததன் மூலம் நிறைய வியூயர்ஸ் (பார்வையாளர்கள்) வந்தனர். அதன் விளைவாக தற்போது ஒவ்வொரு மாதமும் யூ-ட்யூப் எனக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை பணம் தருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details