தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரணாசி: பாரதியாரின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - Mahakavi Subramania Bharathiyar

வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இல்லத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் சென்று அவரது உறவினர்களை சந்தித்தார்.

வாரணாசியில் பாரதியாரின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
வாரணாசியில் பாரதியாரின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

By

Published : Nov 18, 2022, 5:37 PM IST

வாரணாசி:உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இல்லத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (நவம்பர் 18) நேரில் சென்றார். தமிழ் மொழிக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகள் குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டறிந்தார். தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றயை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் நேற்று (நவம்பர் 17) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வாரணாசி சென்றுள்ள தர்மேந்திர பிரதான் அங்கு அனுமன் படித்துறையையொட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி. கிருஷ்ணனை சந்தித்து பாரதியாரின் நினைவுகள் குறித்து கலந்துரையாடினார். நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டி வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சங்கம நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெறுகின்றனர்.

இதையும் படிங்க:'காசி தமிழ் சங்கமம்'; தமிழ் பிரதிநிதிகள் சென்ற ரயிலை வழியனுப்பிய ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details